அல் குர்ஆன் மனனப் போட்டி:
- கொடுக்கப்பட்ட ஸுராக்கள் (Grade wise) அனைத்தையும் மனனம் செய்திருக்க வேண்டும்.
- வேறு ஸூராக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- போட்டியின்போது ஸூராவை முழுமையாகவோ - பகுதியாகவோ - ஒரு சில வசனங்களாகவோ கேட்கப்படும்.
- ”ஜுஸ்வு அம்ம” பிரிவில் கலந்து கொள்பவர்கள் அந்த ஜுஸ்வுவின் அனைத்து சூராக்களையும் கண்டிப்பாக மனனம் செய்திருக்க வேண்டும்.
தர்ஜுமா அறிவு போட்டி:
- கொடுக்கப்பட்ட ஸுராக்கள் (Grade wise) அனைத்தையும் படித்து பொருளுணர்ந்து இருக்க வேண்டும்.
- போட்டியின் போது கொடுக்கப்பட்டுள்ள ஸூராக்களிலிருந்து சில வசனங்களையும் மற்றும் சில வார்த்தைகளையும் அரபியில் ஓதி காண்பித்து அதற்கான அர்த்தம் கேட்கப்படும்.
- கேட்கப்படும் கேள்விகளுக்கு தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ விடையளிக்கலாம்.
பேச்சுப் போட்டி விதிமுறைகள்:
- தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம்.
- கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் (Grade wise) ஏதேனும் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் பேச வேண்டும்.
- ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்படும்.
- பேசப்படும் தகவல்கள் அனைத்தும் அல் குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
பொதுவான விதிமுறைகள்:
- போட்டிகள் அனைத்தும் ஆண்-பெண் இருபாலாருக்கும் தனித்தனியே நடைபெறும்.
- போட்டிகளில் அமீரகத்தில் வசிக்கக்கூடிய தமிழ்பேசும் மக்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.
- போட்டிகள் அனைத்தும் ஒரு சுற்று என்ற அடிப்படையிலேயே இருக்கும், தேவைப்பட்டால் இரண்டாம் சுற்றும் நடைபெறும், இது நடுவர்களின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டது.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது, அவர்களின் முடிவை விமர்சிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ நிர்பந்திக்கக் கூடாது.
- போட்டியாளர்களின் GRADE-ஐ சரிபார்க்க, படிக்கும் பள்ளிக்கூட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
- முன்பதிவு தேதிக்குப் பிறகு போட்டியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.
- வெற்றி பெற்றவர்கள் விபரம் மாநாட்டில் அறிவிக்கப்படும், அந்த நேரத்தில் அனைத்து போட்டியாளர்களும் இருக்க வேண்டும்.
- போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.